search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்
    X
    ஒகேனக்கல் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,800 கன அடியாக அதிகரிப்பு

    கொரோனா தொற்று பரவல் காரணமாக வார விடுமுறையான நேற்று குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்தனர்.
    ஒகேனக்கல்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில் நாட்களாக மேலடுக்கு சுழற்றி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனிடையே தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் வந்த கொண்டு இருந்தது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 800 கன அடியாக அதிகரித்தது இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது.

    இந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    நீர்வரத்தை காவரியின் நுழைவிடமான தமிழக- கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதனிடையே கொரோனா தொற்று பரவல் காரணமாக வார விடுமுறையான நேற்று குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும், சிறுவர் பூங்கா, முதலை பண்ணை, மீன் அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் பரிசல் துறை வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் போலீசார் மெயின் அருவி மற்றும் பரிசல்துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.
    Next Story
    ×