search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    தனியார் ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் கொரோனா தொற்று பரவல் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார்.

    தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் அவர் அறிவுறுத்தினார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு குடல் இறக்க பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர். அதன்படி எடப்பாடி பழனிசாமிக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சையை டாக்டர்கள் செய்தனர்.

    அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் இன்று மாலை அல்லது நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கொரோனா வைரஸ்

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னதாக செய்யப்பட்டது. அதில் தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை நடந்தது.

    Next Story
    ×