search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா தொற்று அதிகரிப்பு : பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 250 படுக்கைகள் தயார்

    கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 250 படுக்கைள் தயார் செய்யப்பட்டு உள்ளது.
    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. தினமும் இந்த மாவட்டங்களில் 400-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார்கள். இதனால் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இங்கு ஓரளவு குணமடைந்தவர்கள் அரசு சித்த மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்காக அங்கு ஏற்கனவே பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பழைய கேன்சர் சென்டரில் மட்டும் கொரோனா ‌நோயாளிகள் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் இ.என்.டி. ப்ளாக் மீண்டும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டு அங்கு நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது 300 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அடுத்து வரும் நாட்களில் மேலும் பலர் சிகிச்சைக்கு வர வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆஸ்பத்திரி பிரதான கட்டிடத்தில் ஒரு பகுதி கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு மேலும் 250 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர். கொரோனா நோயாளிகளுக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து இந்த ஆஸ்பத்திரி நேற்று முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை மூடப்பட்டது. மேலும் இங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
    Next Story
    ×