search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவினாசி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் மையம் மூடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
    X
    அவினாசி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் மையம் மூடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

    திருப்பூரில் தடுப்பூசி தட்டுப்பாடு

    திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அவினாசி, பல்லடம், உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 19 ஆயிரம் பேர், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 86ஆயிரம் பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 5ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வாரத்தில் நடத்தப்பட்ட தடுப்பூசி திருவிழா மற்றும் கொரோனா பரவலால் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் காட்டிய ஆர்வத்தால் மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் மாவட்டத்திற்குட்பட்ட அவினாசி, பல்லடம், உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பினர்.

    இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், இன்னும் 2 நாளில் தேவையான அளவுக்கு தடுப்பூசி டோஸ் வந்து விடும். அதன்பின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி வழக்கம் போல தொடரும் என்றனர். 


    Next Story
    ×