search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தொற்று அச்சம்: கோவையில் மண்டபக்காடு பெருங்கற்கால மையம் மூடல்

    தற்போது மாவட்டத்தில் பரவி வரும் கொரோனா தொற்றை அடுத்து மண்டபக்காடு பெருங்கற்கால பொருட்கள் மையம் மூடப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடுவதற்கு நேற்று முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    செட்டிபாளையம்:

    கடந்த மார்ச் 2-வது வாரத்தில் இருந்து கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த மண்டபக்காடு என்ற பெருங்கற்கால பொருட்கள் மற்றும் அது தொடர்பாக ஆய்வு செய்யும் இடம் உள்ளது. இங்கு பழங்கால பொருட்கள் பல ஆய்வு செய்யப்படுகிறது.

    இந்த மையம் மத்திய தொழில் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கோவை, செட்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் வந்து பெங்கற்கால பொருட்களை பார்த்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் பரவி வரும் கொரோனா தொற்றை அடுத்து மண்டபக்காடு பெருங்கற்கால பொருட்கள் மையம் மூடப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடுவதற்கு நேற்று முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இது தெரியாமல் நேற்று அங்கு ஏராளமானோர் வந்தனர். ஆனால் அங்கு அந்த மையத்தின் கதவில் கொரோனா தொற்று பரவி வருவதால் பொதுமக்கள் பார்வைக்கு தடை விதிக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    Next Story
    ×