search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி

    நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தடுப்பூசி போட்டு கொள்ள வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டதை காணமுடிந்தது.
    நாமக்கல்:

    கொரோனா வைரஸ் பாதிப்பின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என அரசு அறிவித்தது. அதற்காக சிறப்பு முகாம்களும் நடந்து வருகிறது. இதனிடையே நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தன.

    இந்தநிலையில் நேற்று காலை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தடுப்பூசி போட்டு கொள்ள வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டதை காணமுடிந்தது. அதன் காரணமாக வெளியூரில் இருந்து வந்த பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

    இதுகுறித்து மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் சாந்தா கூறியதாவது:-

    கொரோனா தடுப்பூசி இருப்பு நேற்று (நேற்று முன்தினம்) மாலை காலியாகிவிட்டது. அதனால் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடமுடியாத நிலை ஏற்பட்டது. இன்று (நேற்று) மதியத்திற்கு மேல் சேலத்தில் இருந்து தடுப்பூசி வந்தடைந்தன. அதனை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×