search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி இருக்கிறது.

    நாமக்கல்:

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடையே ஆலோசிக்கப்பட்டதில், கோடை வெயில் தாக்கத்தால் முட்டை உற்பத்தி குறைந்து வருவதாலும், கொரோனா தொற்று பரவலால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதாலும், மற்ற மண்டலங்களில் விலை உயர்ந்து வருவதாலும், இங்கும் விலையில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வுடன் ரூ. 4.85ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் முட்டை விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    Next Story
    ×