என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  தூத்துக்குடியில் சினிமா தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடியில் சினிமா தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் சமீபத்தில் வெளியான கர்ணன் படம் திரையிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை பார்ப்பதற்காக கடந்த 13-ந் தேதி இரவு 10.15 மணிக்கு 5 வாலிபர்கள் வந்தனர்.

  அவர்கள் சினிமா டிக்கெட் எடுத்து கொண்டு தியேட்டருக்குள் செல்ல முயன்ற போது, அவர்கள் மது குடித்து இருந்ததால் தியேட்டர் ஊழியர்கள் 5 வாலிபர்களையும் தியேட்டருக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். தொடர்ந்து அவர்களிடம் டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி கொடுத்து வெளியேற்றினார்.

  இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் படம் திரையிடப்பட்டது. படம் ஓடிக் கொண்டு இருந்தபோது, அங்கு 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5 வாலிபர்களும், மறைத்து வைத்து இருந்த பெட்ரோல் குண்டை தியேட்டருக்குள் வீசினர். இதனால் பெட்ரோல் குண்டு தியேட்டர் வளாகத்தில் விழுந்து வெடித்து தீப்பற்றியது. பின்னர் 5 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

  இது குறித்து தியேட்டர் மேலாளர் அருணாசலம் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் அளித்தார்.

  புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தூத்துக்குடி ராஜீவ்நகர் 1-வது தெருவைச் சேர்ந்த மீனவர் மைக்கேல் அந்தோணி (வயது 20), தனராஜ் மகன் அந்தோணிராஜ் (20), ராஜீவ் நகர் 3-வது தெருவைச் ஐ.டி.ஐ. மாணவர் மருதநாயகம் (19), திருச்சி மாவட்டம், லால்குடி, பல்லபுரம், கீழ மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் சுப்பிரமணியன் மகன் சுகுமார் என்ற சந்துரு (26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×