search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு
    X
    பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு

    கோவையில் பிளஸ்-2 செய்முறை தேர்வை 16,479 மாணவர்கள் எழுதினர்

    கோவையில் பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் அரசின் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி பள்ளியில் உள்ள ஆய்வகங்களில் நடத்தப்பட்டுள்ளது.
    கோவை:

    தமிழக பள்ளி, கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 தவிர மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் மே 5-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. முதல் கட்டமாக பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு நடைபெற்றது.

    கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்கியது. முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 356 பள்ளிகளில் 236 மையங்களில் நடைபெற்ற செய்முறை தேர்வினை 16 ஆயிரத்து 479 மாணவர்கள் எழுதினர். முன்னதாக பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவருக்கும் நுழைவு வாயில் முன்பு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வைக்கின்றனர். முக கவசம் அணிந்தே மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.

    இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், இன்று மாவட்டத்தில் முதல் கட்டமாக பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வுகள் அரசின் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி பள்ளியில் உள்ள ஆய்வகங்களில் நடத்தப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக இன்று மாவட்டம் முழுவதும் 16 ஆயிரத்து 479 பேரும் 2-வது கட்டமாக வருகிற 21-ந் தேதி 14 ஆயிரத்து 473 பேர் என மொத்தம் 30 ஆயிரத்து 952 மாணவர்கள் செய்முறை தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வுகள் வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது என்றார்.

    Next Story
    ×