search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

    சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஆத்திரம் அடைந்து இன்று எனக்கு தடுப்பூசி போடாவிட்டால் இங்கேயே தீக்குளிப்பேன் என ஆவேசமடைந்தார். உடனடியாக ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தி ஊசி போட ஏற்பாடு செய்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனைத்தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே முன் களப்பணியாளர்கள், முதியவர்கள், இணைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட வந்த நிலையில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதனைத்தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்தி உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

    இதற்காக நெல்லையில் உள்ள அனைத்து மையங்களிலும் தடுப்பூசிகளை போதிய அளவு இருப்பு வைத்து தகுதி உள்ளவர்களுக்கு செலுத்த வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டு இருந்தார்.

    இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி போடச் சென்றவர்களில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டது. மற்றவர்களுக்கு ஊசிகள் இருப்பு இல்லை எனவும் நாளை வந்து போட்டுக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர்.

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தடுப்பூசி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று 60 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. இன்றும் ஏராளமானோர் தடுப்பூசிகள் போட வந்தனர். ஆனால் மையத்தில் இருப்பு உள்ளதற்கு ஏற்ப இன்று 30 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அப்போது அரசு ஊழியர்கள் 10 பேர் தடுப்பூசி போட வந்தனர்.

    ஆனால் அவர்களுக்கு தேவையான ஊசிகள் இல்லாததால் அங்கிருந்த பொதுமக்களிடம் நீங்கள் நாளை வந்து போட்டுக்கொள்ளலாமா என கேட்டனர். ஆனால் அங்கிருந்தவர்கள் காலை 7 மணி முதலே ஊசி போடுவதற்காக காத்து நிற்கிறோம். எனவே இன்றே எங்களுக்கு ஊசி போடவேண்டும் என பதில் அளித்தனர்.

    டாக்டரிடம் போராடி  தடுப்பூசி போட்ட பெண்

    அப்போது சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஆத்திரம் அடைந்து இன்று எனக்கு தடுப்பூசி போடாவிட்டால் இங்கேயே தீக்குளிப்பேன் என ஆவேசமடைந்தார். உடனடியாக ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தி ஊசி போட ஏற்பாடு செய்தனர்.

    பின்னர் மேலும் பலர் ஊசி போட வந்தனர். அவர்களின் பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டு தற்போது இருப்பு இல்லை எனவே நாளை வந்து போட்டுக்கொள்ளலாம் என கேட்டுக்கொண்டனர். இன்று நெல்லை மாவட்டத்தில் ஏராளமான முகாம்களில் ஊசி போட வந்த பலர் திருப்பி அனுப்பபட்டதால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    இதுதொடர்பாக சுகாதார இயக்குனர் வரதராஜன்னிடம் கேட்ட போது கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனை உள்ளிட்ட 86 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 55 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. ஏற்கனவே கோவாக்சின் தடுப்பூசிகள் தீர்ந்து விட்ட நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் போடப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மையங்களுக்கும் தகுந்தாற்போல் அவை பிரித்து அனுப்பப்பட்டு வந்தது. மாவட்டத்தின் இன்று வரை மட்டுமே தடுப்பூசிகள் இருப்பு உள்ளது. எனவே நாளை முதல் போடுவதற்கு தேவையான தடுப்பூசிகள் சுகதாரத்துறையினரிடம் கேட்கப்பட்டுள்ளது. இன்று இரவு அவை வரும் என எதிர்பார்க்கிறோம். அப்படி வந்தால் நாளை முதல் வழக்கம்போல் தடுப்பூசிகள் போடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×