search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    மதுரை ரிங் ரோட்டில் லாரி டிரைவர்களை தாக்கி செல்போன்கள் பறிப்பு

    மதுரை ரிங் ரோட்டில் இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த லாரி டிரைவர்களை தாக்கி செல்போன்களை வாலிபர்கள் பறித்து சென்றனர்.
    திருமங்கலம்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த சாயமலை கிராமத்தைச்சேர்ந்தவர் ஞானதுரை (வயது40). இவர் கண்டெய்னர் லாரி ஓட்டி வருகிறார்.

    இவர் அரியலூரில் இருந்து சிமெண்ட் மூடைகள் ஏற்றிக்கொண்டு நாகர்கோவிலுக்கு லாரியை ஓட்டி வந்தார். அந்த லாரியில் கிளீனர் புதல்வ செல்வராஜ், மாதவன் ஆகியோரும் இருந்தனர்.

    நேற்று இரவு 8 மணி அளவில் மதுரை ரிங்ரோட்டில் லாரி வந்தபோது டயர் பஞ்சரானது. இதனை சரி செய்ய ஆட்களை அழைத்தபோது காலையில் வருவதாக கூறி விட்டனர்.

    இதனால் ஞானதுரை உள்பட 3 பேரும் கப்பலூர் அருகே லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு அதற்குள்ளேயே தூங்கினர். இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர்களை யாரோ தட்டி எழுப்பி உள்ளனர். 3 பேரும் கண் விழித்து பார்த்தபோது அங்கு 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்கள் ஞானதுரை உள்பட 3 பேரையும் தாக்கி பணம் தருமாறு கேட்டனர். ஆனால் அவர்கள் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரம் அடைந்த கும்பல் 2 செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டது.

    இந்த வழிப்பறி சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஞானதுரை திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×