search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட மகேஸ்வரன்
    X
    கொலை செய்யப்பட்ட மகேஸ்வரன்

    அவனியாபுரத்தில் பால் பண்ணை அதிபர் உயிரிழப்பு- 3 பேர் கைது

    அவனியாபுரத்தில் பால் பண்ணை அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    அவனியாபுரம்:

    மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் மகேஸ் வரன் (46 ). பால்பண்ணை அதிபரான இவர் கடந்த வாரம் அவனியாபுரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டப்பட்டார்.

    இதில் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த மகேஸ்வரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து மகேஷ்வரன் மகன் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து எஸ்.ஆர்.முத்து, அவரது மகன்கள் ஸ்ரீஹரன், ஸ்ரீராம் ஆகியோரை கைது செய்தார்.

    போலீஸ் விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. கொலையுண்ட மகேஸ்வரன், முத்துவிடம் தொழிலுக்காக ரூ. 1 கோடிக்கு மேல் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்க முடியவில்லை. பால் பண்ணை தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி அவர் பணம் கொடுக்காமல் இருந்து வந்தார்.

    இது தொடர்பாக மகேஸ்வரனுக்கும், முத்துவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது மகேஸ்வரன் தன்னால் பணம் தர முடியாது, கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம் என கூறியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த முத்து தனது மகன்களுடன் சேர்ந்து அவரை கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அவனியாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    Next Story
    ×