search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    சென்னை உள்பட 18 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தினசரி பாதிப்பு

    தினசரி பாதிப்புகளை பொறுத்தவரையில் சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் படிப்படியாக வைரஸ் தொற்று அதிகரித்து உள்ளது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

    தினசரி பாதிப்புகளை பொறுத்தவரையில் சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் படிப்படியாக வைரஸ் தொற்று அதிகரித்து உள்ளது.

    நேற்று ஒரே நாளில் 2,564 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    வெளிமாவட்டங்களை பொறுத்தவரையில் நேற்று தினசரி பாதிப்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் 772-ஆக இருந்தது. இதே போன்று பல்வேறு மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சென்னை உள்பட 18 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

    செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக கோவையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நேற்று 540 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 583 பேரும், தூத்துக்குடியில் 244 பேரும், திருப்பூரில் 225 பேரும், திருச்சியில் 216 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கொரோனா வைரஸ்

    வேலூரில் நேற்று ஒரே நாளில் 113 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. திருநெல்வேலியில் 193 பேரும், தஞ்சையில் 158 பேரும், சேலத்தில் 175 பேரும் , கிருஷ்ணகிரியில் 156 பேரும், மதுரையில் 199 பேரும், நாகப்பட்டினத்தில் 157 பேரும், திண்டுக்கல்லில் 112 பேரும், ஈரோட்டில் 153 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×