search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    நெல்லை, தூத்துக்குடியில் இடி-மின்னலுடன் கோடை மழை

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் வெப்ப சுழற்சி காரணமாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று ரெட்டியார்பட்டி, மூலக்கரைபட்டி பகுதியில் பயங்கர இடி-மின்னலுடன் கோடை மழை கொட்டியது. மூலக்கரைப்பட்டி மழை மானியில் 25 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    பாளை பகுதியிலும் நேற்று பிற்பகல் திடீர் மழை பெய்தது. பாளை பகுதியில் 5 மில்லி மீட்டர் அளவுக்கு மட்டுமே மழை பெய்தது. நெல்லை டவுன் பகுதியில் 0.6 மில்லி மீட்டர் மட்டுமே சாரல் மழை பெய்தது. மணிமுத்தாறு பகுதியில் 1.4 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

    மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சி நிலவியது. பெரிய அளவில் மழை பெய்யாததால் கோடை பயிர்கள் எதுவும் பாதிப்படையவில்லை.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று அதிகபட்ச மாக கருப்பாநதி அணைப்பகுதியில் 30 மில்லி மீட்டர் மழை பெய்தது. அடவிநயினார் அணைப்பகுதியில் 8 மில்லி மீட்டர் மழையும், குண்டாறு அணைப்பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    இதனால் வெப்பம் தணிந்து கோடை கால பயிர்கள் நன்கு வளரும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக வைப்பாறு பகுதியில் 17 மில்லி மீட்டர் மழையும், கயத்தாறு பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. மற்ற சில இடங்களில் மழை சாரல் மட்டுமே அடித்தது. இதனால் கரிசல் காட்டு பயிர்கள் செழித்து வளரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    கோடை மழை காரணமாக தென் மாவட்டங்களில் ஓரளவு வெப்பம் தணிந்துள்ளது. அடுத்த மாதம் அக்னி நட்சத்திர வெயில் தொடங்க உள்ளது. அக்னி நட்சத்திர வெயில் முடிந்ததும் தென் மேற்கு பருவ காற்று வீசி, வழக்கம்போல் பருவமழை இந்த ஆண்டு பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×