search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெல்லம்
    X
    வெல்லம்

    வரத்து குறைவால் வெல்லம் விலை உயர்வு

    கரும்புகள் வரத்து குறைந்துள்ளதால் தற்போது வெல்லம் விலை உயர்ந்துள்ளது.
    நொய்யல்:

    நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை கோம்புப்பாளையம், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு ரகமான கரும்புகளை பயிரிட்டுள்ளனர். பின்னர் கரும்புகளை வெட்டி மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படுகிறது.

    தற்போது கரும்புகள் வரத்து குறைந்துள்ளதால், கடந்த வாரம் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,100-க்கு விற்றது தற்போது ரூ.1,200-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,200-க்கும், விற்றது தற்போது ரூ.1,300-க்கும் விற்பனையானது.
    Next Story
    ×