search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களக்காடு பகுதியில் மழை பெய்த காட்சி.
    X
    களக்காடு பகுதியில் மழை பெய்த காட்சி.

    திசையன்விளை, களக்காடு பகுதியில் இடி மின்னலுடன் பெய்த கோடை மழை

    கோடை மழையினால் களக்காட்டில் நிலவி வந்த வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    களக்காடு:

    களக்காடு மற்றும் சுற்றுபுற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தியது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் தவித்தனர்.

    வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பகலில் அனல் காற்று வீசியது. இரவிலும் வெப்பம் நிலவியது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடும் வெயில் வறுத்தெடுத்ததால் தலையணை அருவியிலும் தண்ணீர் வரத்து குறைந்தது.

    இந்நிலையில் நேற்று மதியம் மேகக்கூட்டங்கள் திரண்டன. மாலையில் திடீர் என கோடை மழை கொட்டியது. 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது.

    இந்த மழையின் காரணமாக சாலைகளில் ஆறு போல் மழைநீர் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. மழையின் போது இடி, மின்னலும் காணப்பட்டது.

    கோடை மழையினால் களக்காட்டில் நிலவி வந்த வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை பெய்ததால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

    திசையன்விளை அதன் சுற்று வட்டார பகுதிகளான இடையன்குடி நாடார் அச்சம்பாடு, மடத்தச்சம்பாடு, மருத நாச்சிவிளை, மகாதேவன் குளம், வாழைத்தோட்டம், முதுமொத்தன்மொழி, தலைவன்விளை உள்பட பகுதிகளில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் 6.15 வரை இடி முழக்கத்துடன் பலத்த கோடை மழை பெய்தது. இதனால் தெருக்களில் மழைநீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலையில் குளிர்ச்சியான சூழ்நிலை உருவானது.
    Next Story
    ×