search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    ஆசாரிபள்ளத்தில் சிகிச்சை பெற்ற சென்னை என்ஜினீயர் கொரோனாவுக்கு பலி

    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 63 வயது சிவில் என்ஜினீயர் பலியாகியுள்ளார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 3 வாரத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலை முதல் இன்று காலை வரை நாகர்கோவில் மாநகராட்சிக் குட்பட்ட பகுதியில் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. பீச்ரோடு பகுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று அந்த ஓட்டல் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளித்தனர். பின்னர் ஓட்டல் மூடப்பட்டது.

    ஓட்டலில் பணிபுரிந்த சக ஊழியர்கள் 9 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    அகஸ்தீஸ்வரம் யூனியனில் 20 பேருக்கும், கிள்ளியூர், ராஜாக்கமங்கலத்தில் தலா 3 பேருக்கும், தோவாளை, குருந்தன்கோட்டில் தலா 6 பேருக்கும், திருவட்டாரில் 3 பேருக்கும், முஞ்சிறையில் 4 பேருக்கும், மேல்புறத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

    கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரேநாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் இன்று காலை வரை 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனாவிற்கு அஞ்சு கிராமம் அருகே வாரியூரைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் பலியானார். இந்த நிலையில் இன்று காலை சென்னை என்ஜினீயர் ஒருவரும் பலியாகி உள்ளார்.

    சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 63 வயது சிவில் என்ஜினீயர் ஒருவர் நாகர்கோவிலுக்கு தொழில் நிமித்தமாக வந்திருந்தார். அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்தபோது கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர், இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதையடுத்து குமரி மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 337 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×