search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு வந்த பஸ் ஒன்றில் பயணிகள் சிலர் நின்றுகொண்டு பயணித்த காட்சி.
    X
    கோயம்பேடு வந்த பஸ் ஒன்றில் பயணிகள் சிலர் நின்றுகொண்டு பயணித்த காட்சி.

    மாநகர பஸ்களில் முக கவசம் அணியாமல் பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    மாநகர பஸ்களில் பல பயணிகள் முக கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளியையும் பின்பற்றுவதில்லை என்ற காரணத்தால் ஓடும் பஸ்களில் பயணிகளுக்கு இடையே தகராறு ஏற்படுகிறது.
    சென்னை:

    சென்னை மாநகர பஸ்களில் முக கவசம் அணியாமல் பயணிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுபோக்குவரத்தில் பயணம் செய்பவர்கள் அரசு விதித்துள்ள நோய்தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

    அதன் அடிப்படையில் சென்னை மெட்ரோ ரெயிலில் முககவசம் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. மின்சார ரெயில்களிலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல் ரெயில் நிலையங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல பஸ்களிலும் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற பணியாளர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. பஸ்களிலும் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கி வந்தது. ஆனால் தற்போது பஸ்களில் கிருமி நாசினி வழங்கப்படுவதில்லை. அதேபோல் நின்று கொண்டு பயணிக்க கூடாது என்பதால் மாநகர போக்குவரத்து கழகம் கூடுதல் பஸ்களையும் இயக்கி வருகிறது.

    இருந்தாலும் அலுவலக நேரமான காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

    அதேபோல் பல பயணிகள் முக கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளியையும் பின்பற்றுவதில்லை என்ற காரணத்தால் ஓடும் பஸ்களில் பயணிகளுக்கு இடையே தகராறு ஏற்படுகிறது. அதேபோல் ஒரு சில கண்டக்டர்கள் நாக்கை தொட்டு கொண்டு டிக்கெட் வழங்கும்போது பயணிகளுக்கும் கண்டக்டர்களுக்கும் இடையேயும் தகராறு ஏற்படுகிறது.

    இதுபோன்ற ஒரு சில விரும்பத்தகாத செயல்களையும் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில டிரைவர்கள், கண்டக்டர்களும் முககவசம் அணியாமல் பணியில் ஈடுபடுவதையும் காணமுடிகிறது. பயணிகளை பொருத்தவரையில் மாநகர பஸ்களில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வந்தால் தான் டிக்கெட் வழங்குவது, தவறினால் பஸ்சை விட்டு இறக்கிவிடுவது அல்லது அபராதம் விதிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றினால் தான் அனைவரும் முக கவசம் அணிவார்கள்.

    நோயையும் கட்டுப்படுத்த முடியும். அதேபோல் பஸ்களில் உள்ள இருக்கைகள் மற்றும் பஸ்சையும் தினசரி கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
    Next Story
    ×