search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

    சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி மேற்கண்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி, கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 45 வயதை கடந்தவர்கள் ஆவார்கள். சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி மேற்கண்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி, கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதனை கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார். சிப்காட் உற்பத்தியாளர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். முதல் கட்டமாக ஒரு பெண் தொழிலாளர் உள்பட மொத்தம் 75 தொழிலாளர்கள் நேற்று கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டனர். இது தவிர மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி கவரைப்பேட்டையில் உள்ள தெலுங்கு காலனியில் நடைபெற்ற தடுப்பூசி திருவிழாவில் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் உள்பட மொத்தம் 65 பேர் கொரோனா தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர்.
    Next Story
    ×