search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியை கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்த போது எடுத்த படம்.
    X
    கள்ளக்குறிச்சி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியை கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    கள்ளக்குறிச்சி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியை கலெக்டர் ஆய்வு

    வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டு அரசியல் கட்சியினர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டு அரசியல் கட்சியினர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பணிகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தேர்தல் முடிந்ததும் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. நினைவு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்று பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பணியை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் வளாகங்கள் ஆகியவை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சரியான முறையில் கண்காணிக்கப்படுகிறதா என்று பார்வையிட்டார். பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், வாக்கு எண்ணும் மையத்தை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×