search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா கட்டுப்பாடுகளால் கோடை கால வர்த்தகம் பாதிக்க வாய்ப்பு- திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கவலை

    கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. தொற்று மேலும் அதிகரித்தால் இந்த ஆண்டும் கோடை கால ஆடை வர்த்தகம் பறிபோய்விடும்.

    திருப்பூர்:

    உள்நாட்டு சந்தைக்கான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் திருப்பூரில் ஏராளம் உள்ளன. கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் உள்ள வர்த்தகரிடம் ஆர்டர் பெற்று ஆடை தயாரித்து அனுப்பப்படுகிறது. உள்நாட்டுக்கான ஆடை தயாரிப்பில் கோடை, குளிர், பண்டிகை காலங்கள் மிக முக்கியமானதாக உள்ளன.

    திருப்பூர் நிறுவனங்களுக்கு மற்ற சீசன்களை விட கோடை காலம் அதிக வர்த்தக வாய்ப்புகளை பெற்றுத் தருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020 மார்ச் 24ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதனால், திருப்பூர் நிறுவனங்கள் கோடை கால ஆடை வர்த்தகத்தை முழுமையாக இழந்தன. கடந்த கால பாதிப்புகளில் இருந்து பின்னலாடை துறை படிப்படியாக மீண்டு வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ளதையடுத்து வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. திருப்பூர் நிறுவனங்கள் வெயிலுக்கு இதம் தரும் வகையில் பைன் ரக பின்னலாடை ரகங்களை அதிகளவில் உற்பத்தி செய்து வருகின்றன. இது குறித்து உள் நாட்டுக்கான ஆடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    கொரோனா பாதிப்புகளிலிருந்து, திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் படிப்படியாக மீண்டு வருகிறது. நூல் விலை, ஜாப் ஒர்க் கட்டணங்கள் உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. தொற்று மேலும் அதிகரித்தால் இந்த ஆண்டும் கோடை கால ஆடை வர்த்தகம் பறிபோய்விடும். நிறுவனங்கள் கடந்த கால பாதிப்புகளில் இருந்து மீள்வது இயலாததாகிவிடும்.

    ஊரடங்கு, கட்டுப்பாடுகள் ஆடை வர்த்தகத்தை முடக்கி விடும். இதனால், தயாரித்து அனுப்பும் கோடை கால ஆடைகளுக்கு வெளிமாநில வர்த்தகரிடமிருந்து தொகை பெறுவதில் சிக்கல் ஏற்படும். நிதி நெருக்கடிகள் அதிகரித்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பெரும் சரிவில் தள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×