search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயணிகளிடம் கலெக்டர் முககவசம் அணிந்து வர அறிவுரை வழங்கியபோது எடுத்தபடம்.
    X
    பயணிகளிடம் கலெக்டர் முககவசம் அணிந்து வர அறிவுரை வழங்கியபோது எடுத்தபடம்.

    பஸ் நிலையத்தில் பஸ்களில் ஏறி பயணிகளிடம் கலெக்டர் கொரோனா விழிப்புணர்வு

    ஒரே பகுதியில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதியை தனிமைப்படுத்திய பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு தீவிரமாக கண்காணிக்கப்படும்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் பின்பு பட்டுக்கோட்டை பஸ் நிலையத்திற்கு அதிகாரிகளுடன் சென்று பேருந்து நிலையத்தில் முகக் கவசம் அணியாமல் இருந்தவர்களிடம் முகக் கவசம் அணிய வலியுறுத்தினார்.

    பின்பு பஸ்களில் ஏறி ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பஸ்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தவர்களிடம் ஏன் முககவசம் அணியவில்லை என்றும் முககவசம் அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    தேர்தலின்போது முககவசம் அணிந்து சென்று வாக்களித்த பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றி. அதேபோல் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.

    தற்பொழுது கொரோனாவின் 2-வது அலை நம் மாவட்டத்தில் வேகமாக பாதிப்பை ஏற்படுத்தி வருவகிறது. ஒரு நாளைக்கு நம் மாவட்டத்தில் 68 மருத்துவ முகாம் நடைபெற்று வருவதாகவும் அதேபோல் ஒரு நாளைக்கு 2500 நபர்களுக்கு குறையாமல் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஒரே பகுதியில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதியை தனிமைப்படுத்திய பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு தீவிரமாக கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×