search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக கவசம்
    X
    முக கவசம்

    கோவையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.34,500 அபராதம் வசூல்

    கோவை மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட கருப்ப கவுண்டர் வீதியில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
    கோவை:

    கோவை மாநகரப் பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 300-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய் பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாம், சுகாதாரத் துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் கோவை மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட கருப்ப கவுண்டர் வீதியில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

    இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் 3 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 16 வீடுகளில் உள்ளவர்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். கருப்ப கவுண்டர் வீதியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை மாநகராட்சி கமி‌ஷனர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடார்ந்து, ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமி‌ஷனர் அங்குள்ள ஒரு தேநீர்க் கடையில் கடை உரிமையாளர், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் கடை உரிமையாளருக்கு ரூ.5,400 அபராதமும், கொரோனா விதிமீறி செயல்பட்ட மற்றொரு கடைக்கு ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    இதுதவிர முகக்கவசம் அணியாமல் சென்ற 2 வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தார். இதைத்தொடர்ந்து மேற்கு மண்டலம், மேட்டுப்பாளையம் சாலை பூ மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் 12 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தார்.

    இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி கமி‌ஷனர் சுந்தர்ராஜ், மண்டல உதவிப் பொறியாளார் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். இதுபோன்று முக கவசம் அணியாமல் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் 47 பேர், கிழக்கில் 40 பேர், மேற்கில் 11 பேர் தெற்கில் 11 பேர் என மொத்தம் 102 பேரிடம் தலா 200 ரூபாய் வீதம் ரூ.20 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டது.

    கிழக்கு மண்டலத்தில் 22 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு 4 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டது. 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மத்திய மண்டலத்தில் 3 கடைகளில் ஆய்வு செய்ததில் ஒரு இடத்தில் விதிமீறல் கண்டறியப்பட்டு ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×