search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி இருக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 4 கோடி கோழிகள் மூலம் 2.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலைக்கு, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டையை கொள்முதல் செய்கின்றனர்.

    இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், உற்பத்தி குறைந்து முட்டையின் விலை ஏற்றம் அடைந்துள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி இருக்கிறது.

    4 ரூபாய் 35 காசுகளாக இருந்த முட்டை பண்ணை கொள்முதல் விலை இன்று 10 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 45 காசுகளாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    Next Story
    ×