search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திரம்
    X
    வாக்குப்பதிவு எந்திரம்

    தூத்துக்குடி தொகுதியில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்?

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2லட்சத்து 85ஆயிரத்து 294 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 93ஆயிரத்து 408ஆண்கள், 92 ஆயிரத்து 135 பெண்கள், 10 திருநங்கை ஆக மொத்தம் 1லட்சத்து 85ஆயிரத்து 553 பேர் வாக்களித்து உள்ளனர்.
    தூத்துக்குடி:

    கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மாவட்டத்தில் 71.17 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால், தற்போதைய பொதுத்தேர்தலில் மொத்தம் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 69.84 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலை விட 1.33சதவீதம் குறைந்து உள்ளது.

    இந்த தேர்தலில், விளாத்திக்குளம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 452 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 79 ஆயிரத்து 907 ஆண்கள், 85 ஆயிரத்து 523 பெண்கள், ஒரு திருநங்கை ஆக மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரத்து 431 பேர் வாக்களித்து உள்ளனர். இது 76.43 சதவீதம் ஆகும்.

    இதுவே, கடந்த 2016ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 74.05 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

    இந்த தொகுதியில் தற்போது 2.38 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2லட்சத்து 85ஆயிரத்து 294 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 93ஆயிரத்து 408ஆண்கள், 92 ஆயிரத்து 135 பெண்கள், 10 திருநங்கை ஆக மொத்தம் 1லட்சத்து 85ஆயிரத்து 553 பேர் வாக்களித்து உள்ளனர். இது 65.04சதவீதமாகும். கடந்த தேர்தலில் 68.69 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போது தூத்துக்குடி தொகுதியில் 3.65 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்து உள்ளது.

    திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2லட்சத்து 45ஆயிரத்து 20வாக்காளர்கள் உள்ளனர். இதில், 82ஆயிரத்து 561ஆண்கள், 88ஆயிரத்து 850பெண்கள், 8 திருநங்கை ஆக மொத்தம் 1லட்சத்து 71ஆயிரத்து 419 வாக்காளர்கள் மட்டுமே வாக்குப்பதிவு செய்து உள்ளனர். இது 69.96 சதவீதமாகும். கடந்த தேர்தலில் 72.60 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    தற்போது திருச்செந்தூர் தொகுதியில் 2.64 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்து உள்ளது.

    ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2லட்சத்து 24ஆயிரத்து 384வாக்காளர்கள் உள்ளனர். இதில், 79ஆயிரத்து 671ஆண்கள், 82ஆயிரத்து 648பெண்கள், ஒரு திருநங்கை ஆக மொத்தம் 1லட்சத்து 62ஆயிரத்து 320 பேர் வாக்களித்து உள்ளனர். இது 72.34 சதவீதமாகும். கடந்த தேர்தலில் 74.30 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போது ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 1.96 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2லட்சத்து 50ஆயிரத்து 717 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 86ஆயிரத்து 190ஆண்கள், 88ஆயிரத்து 837பெண்கள், 16 திருநங்கை ஆக மொத்தம் 1லட்சத்து 75ஆயிரத்து 043 பேர் வாக்களித்து உள்ளனர். இது 69.82 சதவீதமாகும். கடந்த தேர்தலில், 72.59 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. சட்டமன்ற தொகுதியில் தற்போது 2.77 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

    கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 65ஆயிரத்து 915வாக்காளர்கள் உள்ளனர். இதில், 82ஆயிரத்து 206ஆண்கள், 93ஆயிரத்து 64பெண்கள், 6 திருநங்கை ஆக மொத்தம் 1லட்சத்து 79ஆயிரத்து 276 பேர் வாக்களித்து உள்ளனர். இது 67.42 சதவீதமாகும். கடந்த தேர்தலில், 66.32 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இந்நிலையில், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1.01 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்து உள்ளது.

    மாவட்டத்தில், மொத்தமுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் விளாத்திக்குளம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விட வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து உள்ளது. இதில், குறிப்பாக மற்ற தொகுதிகளை காட்டிலும் தூத்துக்குடி தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறைந்து உள்ளது. நகர்ப்புறப் பகுதியில் வாக்குப்பதிவு மிகவும் குறைந்து இருப்பது அரசியல் கட்சியினர் இடையே ஒருவித பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×