search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா பாதிப்பு: மதுரையில் 20 தெருக்கள் மூடப்பட்டன

    மதுரை மாவட்டத்திலுள்ள 100 வார்டுகளில் கொரோனா அதிகம் பாதித்த 20 வார்டுகளை தேர்வு செய்யும் பணி இன்று தொடங்கியது.
    மதுரை:

    கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து வருவதையடுத்து வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.

    மதுரையில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களில் மளமளவென உயர தொடங்கியது. அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டாக தொடர்ந்து கொரோனா பரிசோதனை முகாம் நடந்து வருகிறது.

    இன்று முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட டாப் 20 வார்டுகளை தேர்ந்தெடுத்து, அங்கு கொரோனா பரிசோதனை முகாம்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது

    அதன்படி மதுரை மாவட்டத்திலுள்ள 100 வார்டுகளில் கொரோனா அதிகம் பாதித்த 20 வார்டுகளை தேர்வு செய்யும் பணி இன்று தொடங்கியது. அடுத்த படியாக கொரோனா அதிகம் பாதித்த தெருக்களை மூடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக களமிறங்கி உள்ளனர். இதை தொடர்ந்து 20 தெருக்கள் மூடப்பட்டன.

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது.

    இதனிடையே திருப்பூர் மாநகர் பகுதியில் தினமும் 200 மற்றும் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 800 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

    திருச்சி அரசு மருத்துவமனையில் மூடப்பட்ட கொரோனா சிறப்பு வார்டு மீண்டும் பயன்பாட் டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக 450 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தொற்று பரவல் காரணமாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 18 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் தலா 50 பேர் வீதம் ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நடமாடும் மருத்துவ குழுவினரும் பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 94 பேருக்கு தொற்று உறுதியானது. திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு மட்டும் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

    பழனி, கொடைக்கானலில் தொற்று குறைவாக இருந்ததால் அந்த வார்டுகள் மூடப்பட்டன. திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலையில் 150 படுக்கைகள் கொண்ட தற்காலிக கொரோனா வார்டு தயார் செய்யப்பட்டு வருகிறது.

    சேலத்தில் நேற்று ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் தினமும் 500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தினமும் 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    Next Story
    ×