
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள பெரிய கோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 50). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது தாய் பெருமாயியுடன் மொபட்டில் திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் தலையில் காயம்ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மாதேஸ்வரன் இறந்து விட்டார். பலத்த காயம் அடைந்த அவரது தாயார் பெருமாயி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.
இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அரசு பஸ் டிரைவரை தேடிவருகிறார்கள்.