search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நெல்லை மாவட்டத்தில் 2 டாக்டர்கள் உள்பட மேலும் 26 பேருக்கு கொரோனா

    கொரோனா மீண்டும் அதிகரிப்பதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பாக பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இன்று மாநகர பகுதியில் 22 பேருக்கும், பாளை, பாப்பாக்குடி, ராதாபுரம், களக்காட்டில் தலா ஒருவருக்கும் என புதிதாக 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    மாநகர பகுதி தியாகராஜ நகர், என்.ஜி.ஓ. காலனி ஆகிய பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

    இன்றைய பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் தியாகராஜநகரில் ஒரு தம்பதிக்கும், அதே தெருவில் டாக்டர் உள்பட மொத்தம் 7 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகர பகுதியில் மேலும் ஒரு டாக்டரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களை தவிர தென்காசி, சென்னை, மும்பை பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 16,462 உயர்ந்துள்ளது. நேற்று வரை 15,793 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 242 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொரோனா மீண்டும் அதிகரிப்பதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பாக பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் 269 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதில் மேலும் 22 பேருக்கு தொற்று உறுதியானது. கேரளாவில் இருந்து வாக்குப்பதிவிற்காக சங்கரன்கோவில், திருமலாபுரம் பகுதிக்கு வந்த ஒரு வாலிபருக்கும் தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8,865 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் 8,503 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 201 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    Next Story
    ×