
குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருதூர் பகுதியில் முதல் முறையாக தனது வாக்கை செலுத்திய இளம் வாக்காளர் மலர்விழி கூறியதாவது:-
முதன் முறையாக வாக்களித்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. வாக்களிக்க செல்லும் முன்னரே நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொண்டும், அவரது சின்னம் எங்கு இருக்கிறது என்பதை வாக்குச்சாவடியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை பார்த்து அறிந்து கொண்டும் சுலபமாக வாக்களித்தேன். இது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இதே சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த மணிகண்டன், லோகேஸ்வரன் ஆகியோர் கூறுகையில், வாக்களித்து ஜனநாயக கடமையாற்றியது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.