search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை
    X
    யானை

    கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் பீதி

    இந்த யானை ஒட்டனூர், நாகமரை, காட்டூர், நெருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
    ஏரியூர்:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி ஒகேனக்கல் வனப்பகுதி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. இதில் இருந்து பிரிந்து வந்த ஒரு யானை ஏரியூர் அருகே உள்ள ஒட்டனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த யானை ஒட்டனூர், நாகமரை, காட்டூர், நெருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விரட்டியும், அருகே உள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் அருந்திவிட்டு, கிராமப்பகுதிகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இரவு நேரங்களில் இந்த யானை மின் கம்பங்களை தாக்குவதால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×