search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்காக ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 3,853 பஸ்கள்

    சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசு பஸ்கள் விடப்பட்டன.

    சென்னை:

    சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் 5 நாட்களில் பஸ்கள் மூலம் 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் சென்றனர். கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை 5 நாட்கள் சென்னையில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் சென்றனர்.

    இதுதவிர கோவை, நெல்லை, சேலம், திருப்பூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் 3 ஆயிரம் பஸ்கள் மூலம் 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் சொந்த ஊர் சென்றனர்.

    வாக்குப்பதிவு இன்று இரவு 7 மணியுடன் முடிவடைகிறது. சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வழக்கமான பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் விடப்படுகின்றன. இதுவரை 59 ஆயிரத்து 250 பேர் சென்னை வரும் பஸ்களுக்கு முன்பதிவு செய்துள்ளனர். சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக இன்றும், நாளையும் 2 ஆயிரத்து 225 பஸ்களும் அவற்றுடன் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. மொத்தம் 3 ஆயிரத்து 3853 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வாக்கு அளிக்க வரிசையில் நின்றவர்களை படத்தில் காணலாம்

    இதேபோல் சேலம், மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களில் இருந்து திருப்பூர், கோவைக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூரு, சேலம், திருவண்ணமலை, வேலூர் ஆகிய இடங்களுக்கு 1,738 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் தேவைக்கு ஏற்ப சென்னை வரும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×