search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    திருப்பூர் வழியாக ராஜ்கோட்-பனாஸ்வாடிக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

    திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    திருப்பூர்:

    சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    கோவை ரெயில் நிலையத்திலிருந்து ஏப்ரல் 23-ந்தேதி முதல் நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (எண்:06614) மறுநாள் மாலை 5.50 மணிக்கு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சென்றடையும். இதேபோல், ராஜ்கோட்டில் இருந்து ஏப்ரல் 25-ந் தேதி முதல் காலை 5.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (எண்:06613) மறுநாள் இரவு 9.30 மணிக்கு கோவை ரெயில் நிலையம் வந்தடையும். இந்த ரெயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    எர்ணாகுளம்- பனாஸ்வாடி இடையேயான வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் (எண்:06161) 11-ந்தேதி முதல் மாலை 4,50 மணிக்கு புறப்படும். மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு பனாஸ்வாடி சென்றடையும். பனாஸ்வாடியிலிருந்து ஏப்ரல் 12-ந்தேதி முதல் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்:06162) மறுநாள் காலை 6 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும். இந்த ரெயில்கள், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    புதுச்சேரி-மங்களூரு இடையேயான வாராந்திர சிறப்பு ரெயில் (எண்:06855) வரும் 15-ந் தேதி முதல் மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு மங்களூரு சென்றடையும். மங்களூரிலிருந்து வரும் 16-ந்தேதி முதல் மாலை 4.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்:06856), மறுநாள் காலை 9.50 மணிக்கு புதுச்சேரி சென்றடையும். இந்த ரெயில்கள், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, போத்தனூர், பாலக்காடு, சொர்ணூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×