
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை முதலே வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் திரண்டு வந்து ஓட்டு போட்டனர்.
எனினும் 11 மணி நிலவரப்படி தமிழகத்திலேயே குறைவாக நெல்லையில் 20 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.
நெல்லை நகர பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஓரளவுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால் கிராமப்புற பகுதியில் ஓட்டுப்பதிவு மந்தமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பை தொகுதியில் 26 சதவீதமும், குறைந்தபட்சமாக நாங்குநேரியில் 11.39 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.
இதே போல தென்காசி மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 23 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசி தொகுதியில் 30 சதவீதமும், குறைந்தபட்சமாக கடைய நல்லூரில் 20.49 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது.