என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 757-ஆக உயர்ந்துள்ளது.
  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை நாள் ஒன்றின் பாதிப்பு 15-க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

  இந்நிலையில் பல மாதங்களுக்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 100-ஐ கடந்தது. இந்நிலையில் நேற்று மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தற்போது திருப்பூர், கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 757-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 46 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 18 ஆயிரத்து 939-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 591 பேர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  சிகிச்சை பலன் இன்றி இதுவரை 227 பேர் பலியாகியுள்ளனர். எனவே பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
  Next Story
  ×