என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  கீழையூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கீழையூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
  வேளாங்கண்ணி:

  திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புது மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவருடைய மகன் ஜான்சன் (வயது 25). விவசாய தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு கீழையூர் அருகே கீழ ஈசனூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு செல்ல ஈசனூர் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் உள்ள பஸ் நிறுத்தம் முன்பு பஸ்சுக்காக கத்திருந்தார். 

  அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜான்சன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×