என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  மது விற்ற பெண் உள்பட 10 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மது விற்ற பெண் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திண்டுக்கல்:

  தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று முதல் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனுமதியின்றி மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து அருகே உள்ள புளியம்பட்டியில், வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற சுமதி (வயது 40) என்பவரை திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

  இதேபோல் கொடைக்கானல் பகுதியில் மது விற்ற லோகேஷ் (44), கார்த்திக் (24), நல்லதம்பி (41), ஜோசப் (46), பெரியசாமி (62) ஆகிய 5 பேரை கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் பெரும்பாறை பகுதியில் மது விற்ற வேல்முருகன் (26), கார்த்திகேயன் (34), கார்த்தி (42), கணேசன் (51) ஆகிய 4 பேரை தாண்டிக்குடி போலீசார் கைது செய்தனர்.
  Next Story
  ×