search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபாட்டில்கள் பறிமுதல்
    X
    மதுபாட்டில்கள் பறிமுதல்

    கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.2¾ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

    தமிழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    கோவை:

    தமிழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவர்கள் ஆங்காங்கே வாகனசோதனை நடத்தி பணம், மதுபாட்டில்கள், தங்கம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதை தொடர்ந்து வாகனங்களில் மதுபாட்டில்கள் கொண்டு கடத்தப்படுவதை தடுக்க தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் நேற்று கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ.37 ஆயிரத்து 104 மதிப்பிலான மதுபாட்டில்களும், சூலூரில் ரூ.32 ஆயிரத்து 520 மதிப்பிலான மதுபாட்டில்களும், கிணத்துக்கடவு தொகுதியில் ரூ.36 ஆயிரத்து 84 மதிப்பிலான மதுபாட்டில்கள் என மொத்தம் ஒரே நாளில் ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்து 676 மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக கோவை வடக்கு தொகுதியில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்து 500, சிங்காநல்லூர் தொகுதியில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 300 என மாவட்டம் முழுவதும் ரூ.9 லட்சத்து 27 ஆயிரத்து 720 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கோவையில் இதுவரை ரூ.6 கோடியே 83 லட்சத்து 75 ஆயிரத்து 318 ரொக்கம், ரூ.70 லட்சத்து 14 ஆயிரத்து 282 மதிப்பிலான மதுப்பாட்டில்கள் மற்றும் இதர பொருட்கள் என மொத்தம் ரூ.55 கோடியே 47 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
    Next Story
    ×