
திருவையாறு:
தேர்தல் பறக்கும்படையில் தேர்தல் நிலைக்குழு மற்றும் துணைவட்டாட்சியர் அருணாதேவி தலைமையில் போலீஸ் ஏட்டுக்கள் வேல்முருகன் மற்றும் துணைராணுவ குழுவினர் திருவையாறு தொகுதி அரசூர் மெயின்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவையாறிலிருந்து தஞ்சைநோக்கி ஸ்கூட்டியில் வந்த ஒரு பெண்ணை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 1 லட்சத்து 20 ஆயிரம் பணம் இருந்தது. அவர் அரியலூர் மாவட்டம், கீழகொளத்தூரை சேர்ந்த ராஜேந்திரபிரசாத் மனைவி ரெத்தினபிரியா (36) என்றும் தெரியவந்தது. அவர் தஞ்சையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு பணம் கொடுப்பதற்காக செல்வதாக கூறினார்.
அந்த பணத்திற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து அந்த பணத்தை அருணாதேவி மற்றும் போலீசார் திருவையாறு தாலுக்கா அலுவலகத்தில், தாசில்தார் வில்சனிடம் ஒப்படைத்தனர். அவர் பணத்தை எண்ணி கருவூலத்தில் ஒப்படைத்தார்.