என் மலர்

  செய்திகள்

  வாகன சோதனை
  X
  வாகன சோதனை

  பாபநாசம் அருகே வேனில் கொண்டு வந்த ரூ.2½ கோடி பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை அதிகாரி செல்வகுமாரி தலைமையில் பூண்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  பாபநாசம்:

  பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை அதிகாரி செல்வகுமாரி தலைமையில் பூண்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற வேனை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். தேசிய உடைமை ஆக்கப்பட்ட வங்கி மூலம் ரூ.2 கோடியே 50 லட்சம் எடுத்து சென்றது தெரிய வந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு பாபநாசம் சார் நிலை கருவூல அலுவலகத்தில் உதவி கருவூல அலுவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

  இதேப்போல் மாத்தூரில் நடந்த சோதனையில் உரிய ஆவணமின்றி வேனில் எடுத்து வந்த ரூ.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

  Next Story
  ×