
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில் பிரசாரத்தின் இறுதிநாளான இன்று நடிகைகளான சுகாசினியும், அக்சராஹாசனும் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இன்று காலை கோவை அம்மன் குளம், மானக்கா வீதி ஆகிய இடங்களில் அவர்கள் நடந்து சென்று பொதுமக்களிடம் டார்ச்லைட் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு ஓட்டு கேட்டனர்.
மேள தாளம் முழங்க ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட சுகாசினியும், அக்சராஹாசனும் நடனமாடி அசத்தினர். இதை பார்த்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் சுகாசினி, அக்சராவின் நடனத்தை ரசித்து பார்த்தனர். அவர்களிடம் கமல்ஹாசனுக்கு வாக்களிக்குமாறு சுகாசினி, அக்சரா கேட்டுக்கொண்டனர்.
கமல்ஹாசனுக்காக மகளும், அண்ணன் மகளும் தாங்கள் ஒரு பெரிய நடிகை என்பதையும் மறந்து நடனமாடி வாக்கு சேகரித்தது கோவையில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.