என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  கோவையில் புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை மாவட்டத்தில் புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியது.
  கோவை:

  கோவை மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட உள்ளது. இவர்களுடன் சேர்த்து இதுவரை மாவட்டத்தில் 59 ஆயிரத்து 821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

  கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 148 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 120 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 2007 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

  கோவை மாவட்டத்தில் நேற்று வரை 9 லட்சத்து 29 ஆயிரத்து 481 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 13 ஆயிரத்து 209 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

  மேற்கண்ட தகவலை மாவட்ட சுகாதார துறையினர் தெரிவித்து உள்ளனர்.
  Next Story
  ×