என் மலர்

  செய்திகள்

  திருமாவளவன்
  X
  திருமாவளவன்

  தோல்வி பயத்தின் விளைவுதான் வருமான வரி சோதனை -திருமாவளவன் கண்டனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து வருமான வரிச்சோதனை திட்டமிட்டு நடத்தப்படுவதாக திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.
  சென்னை:

  தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவ்வகையில், சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். 

  அதே போல் அண்ணா நகரில் உள்ள திமுக எம்.எல்.ஏ. மோகன் மகன் கார்த்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  வருமான வரித்துறை

  பாஜகவின் தோல்வி பயத்தின் விளைவுதான் வருமான வரித்துறை சோதனை என விடுதலை சிறுத்தைகள்  தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து வருமான வரிச்சோதனை திட்டமிட்டு  நடத்தப்படுவதாகவும், அரசியல் ரீதியான சோதனைகளை மக்கள் அறிவார்கள் என்றும் திருமாவளவன் கூறினார்.
  Next Story
  ×