என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  காங்கேயத்தில் எலக்ட்ரிக்கல் கடையில் திருடியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எலக்ட்ரிக்கல் கடையில் மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
  காங்கேயம்:

  காங்கேயம் நகரம், அகிலாண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 33). இவரும் இவரது நண்பர்களும் இணைந்து, காங்கேயம், அய்யாசாமி நகர் காலனி பகுதியில் கடந்த 4 வருடங்களாக எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி இரவு 9 மணியளவில் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் 3 பேரின் செல்போனுக்கும் கடையில் வைக்கப்பட்டிருந்த அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் செல்போனில் பார்த்தபோது கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கடைக்குள் மர்மநபர் ஒருவர் நிற்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரும் கடைக்கு விரைந்து வந்து கடைக்குள் பதுங்கியிருந்த நபரைப் மடக்கி பிடித்தனர்.

  விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்பரப்பி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (43) என்பதும், கடையில் உள்ள மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.17,960 -ஐ லட்சுமணன் திருடியது தெரிய வந்தது. உடனே அந்தப் பணத்தை மீட்ட வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள், உடனடியாக லட்சுமணன் மற்றும் அவர் ஓட்டி வந்த மொபட்டை பறிமுதல் செய்து காங்கேயம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து காங்கேயம் போலீசார் வழக்குபதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனர்.
  Next Story
  ×