என் மலர்

  செய்திகள்

  பணம் பறிமுதல்
  X
  பணம் பறிமுதல்

  திருவையாறு அருகே உரிய ஆவணமின்றி லாரியில் எடுத்து சென்ற ரூ.2.76 லட்சம் பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவையாறு அருகே உரிய ஆவணமின்றி லாரியில் எடுத்து சென்ற ரூ.2.76 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
  திருவையாறு:

  திருவையாறு அருகே திருப்பழனத்தில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் செபாஸ்டின் தாமரைச்செல்வி தலைமையில் ஏட்டு நிலோஸ், துணை ராணுவ குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது அய்யம்பேட்டையிலிருந்து திருவையாறு நோக்கி வந்த ஒரு மினி லாரியை பிடித்து சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணமின்றி ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 520 இருந்தது.

  இதையடுத்து அந்த பணம் திருவையாறு தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளாவிடம் பறக்கும் படை அலுவலகர் செபாஸ்டின் தாமரைச்செல்வி ஒப்படைத்தார். தாசில்தார்கள் நெடுஞ்செழியன், வில்சன் ஆகியோர் பணத்தை எண்ணி சரிபார்த்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

  Next Story
  ×