என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  நெல்லையில் இன்று பெண் டாக்டர் உள்பட மேலும் 60 பேருக்கு கொரோனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.
  நெல்லை:

  நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.

  மாநகர பகுதியில் 40 பேருக்கும், மானூரில் 7 பேருக்கும், பாளையில் 4 பேருக்கும், சேரன்மகாதேவி, வள்ளியூரில் தலா 3 பேருக்கும், நாங்குநேரி, களக்காடு, அம்பையில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

  இதில் தூத்துக்குடியை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரும், தென்காசியை சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

  இது தவிர பாளை பகுதியில் ஒரே வீட்டில் 2 பெண்களுக்கும், பேட்டையில் ஒரே தெருவில் வசிக்கும் 2 பேருக்கும், வி.எம்.சத்திரம் மின் ஊழியர் குடியிருப்பில் வசிக்கும் 5 பேருக்கும் இன்று தொற்று உறுதியானது.

  மேலும் கே.டி.சி. நகரை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டது. இது தவிர மாநகர பகுதியில் 4, 7 வயது சிறுவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் நெல்லை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று எடுக்கப்பட்ட 1,183 பரிசோதனையில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

  இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 152 ஆக உயர்ந்தது. இவர்களில் 15,716 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இன்றுடன் சேர்த்து மொத்தம் 221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 215 பேர் இறந்துள்ளனர்.
  Next Story
  ×