என் மலர்

  செய்திகள்

  பிரகாஷ் ஜவடேகர்
  X
  பிரகாஷ் ஜவடேகர்

  ரஜினிக்கு விருது கொடுக்கப்பட்டதற்கும் தமிழக தேர்தலுக்கும் தொடர்பு இல்லை- பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சட்டசபை தேர்தலில் ரஜினி ரசிகர்களின் ஆதரவை பெறுவதற்காக மத்திய அரசு இந்த நேரத்தில் விருதை அறிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
  சென்னை:

  நடிகர் ரஜினிகாந்துக்கு இந்திய திரைப்படத்துறையில் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன.

  இந்த நிலையில் ரஜினிக்கு மத்திய அரசு இந்த விருதை அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தலில் ரஜினி ரசிகர்களின் ஆதரவை பெறுவதற்காக மத்திய அரசு இந்த நேரத்தில் விருதை அறிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

  இது தொடர்பாக டெல்லியில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

  அதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், “ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கும், தமிழக சட்டசபை தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தார்.

  Next Story
  ×