search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஓரினச்சேர்க்கை பெண் ஜோடிக்கு உளவியல் ஆலோசனை - ஐகோர்ட்டு உத்தரவு

    ஓரினச்சேர்க்கை பெண் ஜோடிக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    மதுரையை சேர்ந்த தொழிலதிபர்கள் மகள்கள் சுனிதா (வயது 22). அனிதா (20) (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). நெருங்கிய தோழிகளான இவர்கள், ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கி, ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறினர். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இருவரது பெற்றோரும், அவர்களுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைக்க முயற்சித்தனர். ஆனால் அதற்கு சம்மதிக்காத இரு பெண்களும், சென்னைக்கு ஓடி வந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இந்த இரு பெண்களையும், அவர்களது பெற்றோரையும் நேரில் ஆஜராக ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தனர்.

    இதன்படி, இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அனைவரும் நேரில் ஆஜரானார்கள். அவர்களை தன்னுடைய அறையில் வைத்து விசாரித்த நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு

    இந்த இரு பெண்களும், தற்போது சென்னையில் தன்னார்வத் தொண்டு நிறுவன பாதுகாப்பில் உள்ளனர். இவர்களது பெற்றோர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர். தங்களது மகள்களின் இந்த உறவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகின்றனர். இவர்கள் அனைவருக்கும், உளவியல்ரீதியான ஆலோசனை வழங்க வேண்டியுள்ளது. அதனால், இந்த 2 இளம்பெண்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் உளவியல் நிபுணர் வித்யா தினகரன் உளவியல்ரீதியான ஆலோசனை வழங்கவேண்டும். பின்னர், அதுதொடர்பான அறிக்கையை வருகிற ஏப்ரல் 26-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

    Next Story
    ×