search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார ரெயில்
    X
    மின்சார ரெயில்

    பராமரிப்பு பணி- மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

    பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இடையே காலை 9.30, 9.45, 11.30 மணி, மதியம் 12, 1 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் இடையே காலை 9.50, 11.05 மணி, மதியம் 12.50 மணி, வேளச்சேரி- திருவள்ளூர் இடையே காலை 9.05 மணி, மதியம் 12.15 மணி, மூர்மார்க்கெட்-திருத்தணி இடையே காலை 10, 11.45 மணி, சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே இயக்கப்படும் சுற்றுவட்ட ரெயில் காலை 10.20 மணி, வேளச்சேரி-திருத்தணி இடையே காலை 11.20 மணி, மூர்மார்க்கெட்-கடம்பத்தூர் இடையே காலை 10.30 மணி, மதியம் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (30-ந்தேதி) இந்து கல்லூரி-பட்டாபிராம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×