search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    அந்தமான் அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி

    தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக வானிலை இலாகா அறிவித்துள்ளது.

    தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அது 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதனை தொடர்ந்து 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாகவும் உருவாகும் என்று வானிலை இலாகா கணித்துள்ளது.

    இதன் காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகை அருகே உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. எனவே தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை இலாகா கேட்டுக் கொண்டுள்ளது.

    மழை

    தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியசாகவும் இருக்கும். ஏப்ரல் 2-ந் தேதி முதல் தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழக பகுதிகளை ஒட்டி வீச சாத்தியங்கள் இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் கூறி உள்ளனர்.
    Next Story
    ×