search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரம் கோவிலில் நடந்த யாக பூஜையில் சசிகலா பங்கேற்றார்
    X
    ராமேசுவரம் கோவிலில் நடந்த யாக பூஜையில் சசிகலா பங்கேற்றார்

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் சசிகலா இன்று சாமி தரிசனம்

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சசிகலா வந்தார். அவருக்கு நுழைவு வாயிலில் கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற் பளிக்கப்பட்டது. தொடர்ந்து காசி விஸ்வநாதர் சன்னதியில் 12 குருக்கள் பங்கேற்ற ருத்ராபிஷேகம் மற்றும் யாக பூஜையில் சசிகலா கலந்து கொண்டார்.

    ராமேசுவரம்:

    பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அரசியலில் இருந்து ஒதுக்குவதாக அறிவித்தார். அதன்பின் அவர் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார்.

    அதன்படி நேற்று ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சசிகலா தஞ்சாவூரில் இருந்து கார் மூலம் வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையில் அ.ம.மு.க. வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மாலை 6 மணிக்கு சசிகலா திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு வந்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கார் மூலம் ராமேசுவரத்திற்கு சென்றார். இரவு அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சசிகலா வந்தார். அவருக்கு நுழைவு வாயிலில் கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற் பளிக்கப்பட்டது. தொடர்ந்து காசி விஸ்வநாதர் சன்னதியில் 12 குருக்கள் பங்கேற்ற ருத்ராபிஷேகம் மற்றும் யாக பூஜையில் சசிகலா கலந்து கொண்டார்.

    பூஜை முடிந்த பின் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் அமர்ந்த பின் அங்கிருந்து காரில் சசிகலா தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார்.

    சாமி தரிசனத்தின்போது கோவிலில் நடந்த பூஜையின் போதும் சசிகலா யாருடனும் பேசவில்லை.பத்திரிக்கையாளர்களுக்கும் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டார்.

    முன்னதாக சசிகலா பெயரில் ராமேசுவரம் சிருங்கேரி மடத்தில் யாகபூஜை நடந்தது.


    Next Story
    ×